வரலாறு சந்தித்த வழக்குகள் - வைகோ
Varalaru santhitha vazhakkukal - Vaiko
Varalaru santhitha vazhakkukal - Vaiko
நூல் குறிப்பு:
இந்நூல் ஓர் அரசியல் அமைப்பால் வெளியிட்டப்பட்ட நூல் என்ற போதும் இந்நூலை நான் வாசிக்க ஒரே காரணம் திரு.வைகோ அவர்கள் மீதான அபிமானம்தான். எனினும் அரசியற் கட்சி சார் வெளியீடு என்பதால் பெரிய எதிர்பார்ப்பின்றியே வாசிக்க ஆரம்பித்தேன். அதற்கேற்றாற் போல் நூலின் முன்னுரையும் அணிந்துரையும் சலிப்புற வைத்தன. இவற்றை வாசிப்பதைத் தவிர்த்து நேரடியாக வைகோ அவர்களின் உரையை வாசிக்க ஆரம்பிப்பது நலம். வைகோ அவர்களின் உரை சூப்பராக இருந்தது. பல முக்கியமான வழக்குகளைப் பற்றிய சுவாரசியமான தகவல்களோடு ஆங்காங்கே மேற்கோள்களையும் பண்டைய இலக்கியப் பாடல்களையும் சேர்த்து மிக அழகாக தனது உரையை வடிவமைத்திருந்தார் வைகோ அவர்கள். அண்ணா, காந்தி தொடக்கம் பிடல் காஸ்ட்ரோ வரையும் சேக்கிழார் முதல் ஷேக்ஸ்பியர் வரையும் உரையில் வந்துபோகின்றார்கள். உரையை வாசிக்கும் போதே இவ்வுரையைத் தயார் செய்வதற்கு எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. அச்சுப்பிழை காரணமாக லிங்கனை பற்றிய சில தகவல்களில் 20ம் நூற்றாண்டுக்குரிய ஆண்டுகள் காணப்படுகின்றன. அவற்றை 19ம் நூற்றாண்டுக்குரியதாக மாற்றி வாசிக்கவும்.