இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும் அனைத்து புத்தகங்களும் இணையதளத்தில் பரவலாக இலவசமாக கிடைக்கும் புத்தகங்கள் மட்டும் தான். நான் எந்த மின்-புத்தகத்தையும் உருவாக்குவதில்லை. எனவே இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்து ஆட்சேபணைகள் வரும் பட்சத்தில் அப்பதிவு உடனடியாக நீக்கப்படும். புத்தகம் படிக்கும் பழக்கத்தினை அனைவாிடமும் ஏற்படுத்துவது என்பதே ஒரே நோக்கம். இங்கு பதிவிடப்படும் புத்தகங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் அந்த புத்தகத்தினை பலருக்கு அறிமுகப்படுத்துவதோடு படிக்கும் ஆர்வத்தினையும் தூண்டும்...
Tuesday, April 23, 2019
இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
Indiavin Irunda Kalam - Sasitharur
நூல் குறிப்பு:
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின்மூலம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நன்மைகளை வியந்தோதும் நூல்கள் நம்மிடம் ஏராளம் உள்ளன. அவற்றில் பலவற்றை இந்தியர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் காலனியாதிக்கம் இந்தியாவை எப்படிச் சீரழித்தது என்பதையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல்கள் அரிதாகவே எழுதப்பட்டுள்ளன.
சசி தரூரின் இந்தப் புத்தகம் அந்தக் குறையைத் தீர்த்துவைத்திருக்கிறது. ஏராளமான வரலாற்றுத் தரவுகளையும் நியாயமான வாதங்களையும் முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் இந்தியாவின் இருண்ட காலம்தான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவுகிறது.
தவிரவும் காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் பல கற்பிதங்களையும் தகர்த்தெறிகிறது. பின்தங்கியிருந்த இந்தியாவுக்கு நாகரிகத்தை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ் பேரரசுதாக் என்பதையும் ஆங்கில மொழி, ரயில்வே, நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்தர ஊடகம் ஆகியவற்றை இந்தியர்களின் நலனுக்காகவே பிரிட்டன் அறிமுகப்படுத்தியது என்பதையும் தரூர் ஏற்கமறுக்கிறார்.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு இழைத்த அநீதியைத் தகுந்த சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்நூலை ஒவ்வொரு இந்தியரும் வாசிக்கவேண்டியது அவசியம். நம் கடந்த காலம் குறித்த பிழையான அல்லது குறையான புரிதலைக் களைய உதவும் ஒரு முக்கியமான ஆவணம் இது.
ஆங்கிலத்தில் வெளிவந்து மிகுந்ந வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கும் நூலிக் An Era of Darkness அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு.
சசி தரூர்
(நூல் ஆசிரியர்)
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, வெளியுறவுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றியவர். ஐ.நாவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்தவர். நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற பல இதழ்களில் இவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சில நாவல்கள் எழுதியுள்ளார். இந்திய அரசியல், கலாசாரம், வரலாறு, சமூகம், அயல்நாட்டுக் கொள்கை ஆகிய துறைகளில் பல நூல்கள் எழுதியிருக்கிறார். உலகம் அறிந்த ஒரு பேச்சாளரும்கூட.
ஜே,கே. இராஜசேகரன் (மொழிபெயர்ப்பாளர்)
தினத்தந்தி நாளிதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதன் வணிகப் பகுதியான தி எகனாமிக் டைம்ஸின் பொறுப்பாசிரியர். இது அவருடைய ஏழாவது மொழிபெயர்ப்பு நூல். முன்னதாக ஷேக்ஸ்பியரின் மெக்பெத் பயங்கரவாதம் நேற்று இன்று நாளை உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

📖 உடையும் இந்தியா
🖋 அரவிந்தன் நீலகண்டன், ராஜிவ் மல்ஹோத்ரா
Udaiyum India - Ananth Neelakandan, Rajiv Malgothra
நூல் குறிப்பு:
இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது.
1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம்.
2. நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம்.
3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம்.
இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவற்றின் பங்கைப் பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
ஆரிய-திராவிட இனங்கள் என்ற புரட்டு எந்த நூற்றாண்டில், யாரால் உருவாக்கப்பட்டது, ஆஃப்ரோ-தலித் கருத்தாக்கம் யாரால், எப்போது முன்வைக்கப்பட்டது, எப்படி இந்த அடையாள அரசியலானது இந்தியர்களைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறது என்பதை முழுமையாக இந்நூலில் அலசுகிறார்கள் ஆசிரியர்கள்.

Subscribe to:
Posts (Atom)
அனைவருக்கும் வணக்கம்... ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...
-
ஓஷோ புத்தகங்கள் 1. அந்நியோன்யம் - ஓஷோ 2. ஒளிந்திருப்பது ஒன்றல்ல 3. ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்