Thursday, May 9, 2019

தோல் - டி.செல்வராஜ்


தோல் - டி.செல்வராஜ் - Thol - T.Selvaraj


நூல் குறிப்பு:

தோலால் செய்யப்பட்ட பொருட்கள் நமக்குப் பிடித்தமானவை. ஏனென்றால் அவை மிருதுவானவை; அழகானவை. ஆனால் ஒரு முறையேனும் தோல் பதனிடும் தொழில் பற்றி, அதில் வேலை  செய்யும் தொழிலாளர் பற்றி எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?

தமிழகத்தில் இருக்கும் தோல்ஷாப்புகளில் சுண்ணாம்பு நீருக்குள் நின்று தோலலசுவதால் இரணமாகிப் போன உடலோடும், காலங்காலமாக நிலவும் சாதி அடிமைத்தனத்தாலும், முறி எழுதி வாங்கிக்கொண்ட தோல்ஷாப்பு முதலாளிகளின் அட்டகாசத்தாலும் , இரணமாகி போன உள்ளத்தோடும் நின்ற மக்களின் கதை தெரியுமா?

சாதி அடிமைத்தனத்தின் கொடுவிலங்குகள் உடைத்து. தொழிலாளி ஏழை மக்களென ஒன்றுபட்டுத் தோல் ஷாப்பு உடைமைகளையும், பெருந்தனக்காரர்களையும், மமதை கொண்ட அதிகாரிகளையும் தூவென ஊதித்தள்ளி. உரிமைகளை வென்றெடுத்துத் தன்மானத்துடன் வாழத் தலைப்பட்ட மக்களின் கதையை, அவர்களின் தோளோடு தோள் கொடுத்து நின்ற பொதுவுடைமை இயக்கம் மக்களின் இதயத்தில் ஊற்றெடுத்து..' குருதியில் கலந்து வளர்ந்த கதையைச் சொல்லும் நாவல் 'தோல்'.

டி.செல்வராஜின் இந்த நாவல் தோல் தொழிலாளர்களைப் பற்றிய முதல் இலக்கியப் பதிவு. திண்டுக்கல் மாவட்டத் தோல் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த சமூக வரலாற்றைப் பொதுவுடைமை இயக்கத்தின் வரலாற்றோடு இணைத்துச் சொல்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வைப் போராட்ட உணர்வோடும் நம்பிக்கையோடும் எழுச்சியோடும் சித்தரிக்கிறது. மக்சிம் கார்க்கி முன்னெடுத்த சோசலிச யதார்த்தவாதம் தமிழ் நாவல் உலகில் விழுதுவிட்டு நிற்பதற்கு இந்நாவல் ஒரு சான்று.

No comments:

Post a Comment

அனைவருக்கும் வணக்கம்...        ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புத்தகங்கள் சில தற்போது இல்லை என வருகிறது என தெரியவருகிறது. தாங்கள் விரும்பும் பு...