எம்.ஜி.ஆர், கலைஞர் - MGR, Kalainjar
நூல் குறிப்பு:
1967-ஜனவரிக்கு முன்பிருந்தே எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆர் பனிப்போர் தொடங்கி விட்டதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தது. 1967 ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை சுமார் ஆறு மணிக்கு, ‘எம்.ஜி.ஆரை எம்.ஆர் ராதா சுட்டு விட்டார்’ என்ற செய்தி, காட்டுத் தீயாகச் சென்னை நகரில் பரவி, தமிழகமெங்கும் எதிரொலித்தது. பல இடங்களில் கலவரம், பஸ் மறியல், எரிப்புச் செய்திகள்.
அடுத்த நாள் காலை, ‘எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக் கொள்ள முயன்றார் ராதா; இருவரும் மருத்துமனையில் அனுமதி; இருவர் உயிருக்கும் ஆபத்தில்லை என்ற பத்திரிகைச் செய்திகள்தான் அமைதியைக் கொண்டு வந்தன.
நீதிமன்றத்தின் இந்த வழக்கு நடை பெற்ற போது நடந்த குறுக்கு விசாரணைகள் மட்டுமே பத்திரிகைளில் வந்தன. ஆனால் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பின் முழு விவரங்கள் வெளிவரவே இல்லை. அந்தத் தீர்ப்புகளில் பல உண்மைகள் பதிவாகி உள்னை. இரு பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட கொலை முயற்சி வழக்கு மட்டுமல்ல. ஆதாரப்பூர்வமான சரித்திரக் குறிப்பு இது.
1958 ல் பிறந்த ரங்கராஜன், குமுதத்தில் எழுத ஆரம்பித்து சுதாங்கன் ஆனபோது வயது 23, தமிழின் முக்கியமான பத்திகையாளர்களுள் ஒருவராக அறியப்படும் சுதாங்கள், சிறந்த கிராமப்புற ரிப்போர்ட்டிங்குக்காக 1986ல் பொருமைக்குரிய ‘ஸ்டேட்ஸ்மன்’ விருது பெற்றவர். இவர், தினமணியின் பொறுப்பாசிரியராக இருந்த காலத்தில், தினமணி கதிரில் எழுதிய தொடர் இது. ‘தேதி இல்லாத டைரி’(கட்டுரைகள்), ‘சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்(நாவல்) ஆகியவை சுதாங்கனின் முந்தைய நூல்கள்.
Hai Admin,
ReplyDeleteIt shows File Not Found, Please update it.